இனி விமானத்தில் சில அவசரகால இருக்கைகள் விற்பனைக்கு இல்லை: ஏ‌ஷியான

1 mins read
d202bc33-5e1a-4e19-a9e9-73cabf9c1089
படம்: ஏஎஃப்பி -

தென் கொரியாவின் ஏ‌ஷியான விமான நிறுவனம் இனி அதன் விமானங்களில் அவசரகால இருக்கை சிலவற்றை விற்பனை செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் நடுவானில் விமானத்தின் கதவை திறந்தார்.

கிட்டத்த 200 பயணிகளுடன் விமானம் டேகு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில் திடீரென பயணி கதவைத் திறந்துள்ளார்.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இருப்பினும் சில பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிறுவனம் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

விமானத்தில் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்பனையானாலும் அவசரகால இருக்கைகளான 31A, 26A இனி விற்பனைக்கு இல்லை என்று அது கூறியுள்ளது.

விமானத்தின் கதவைத் திறந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

ஆடவர் விமானத்தில் தமக்கு போதிய அளவு காற்றோட்டம் இல்லாத காரணத்தால் கதவைத் திறந்ததாக அதிகாரிகளிடம் கூறினார்.

ஆடவர் விமானத்தின் கதவைத் திறக்கும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்