குகைக்குள் தனியாக 500 நாள்கள் வாழ்ந்த பெண்

குகைக்குள் தனியாக 500 நாள்கள் வாழ்ந்த பெண்

1 mins read
114a7b8b-c683-4188-a19b-7e34a5a544bc
படம்: ராய்ட்டர்ஸ் -

மனிதர்களுடன் தொடர்பு இல்லாமல் 500 நாள்கள் குகைக்குள் தனியாக வாழ்ந்துள்ளார் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் விளையாட்டாளர் ஒருவர்.

பீட்ரிஸ் பிலாமினி என்னும் அந்த 50 வயதுப் பெண் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கிரானடாவில் உள்ள ஒரு குகைக்குள் சென்றார். தற்போது அவர் மீண்டும் வெளி உலகத்தில் அடியெடுத்துவைத்துள்ளார்.

பிலாமினி குகைக்குள் சென்ற போது அவருக்கு 48 வயது, உலகில் கொவிட்-19 சூழல் மோசமாக இருந்தது, அப்போது ர‌ஷ்யா உக்ரைன் மீது படை எடுக்கவில்லை.

சோதனை முயற்சியாகக் குகைக்குள் அனுப்பப்பட்ட பிலாமினியின் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கவனித்துக் கொண்டே இருந்தனர் விஞ்ஞானிகள்.

70 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த குகைக்குள் பிலாமினி உடற்பயிற்சி, ஓவியம் வரைதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் அந்த பெண் 60 புத்தகங்களைப் படித்தும், 1,000 லிட்டர் தண்ணீரைக் குடித்தும் உள்ளார்.

உலகில் என்னென்ன நடந்தது என்று தெரிவியவில்லை, இந்த அனுபவம் அருமையாக இருந்தது, எதனுடனும் ஒப்பிடமுடியாது என்றார் அவர். இருப்பினும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்