தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவ வாகனம்மீது தாக்குதல்; 30 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

1 mins read
0905da4c-4099-423f-b228-24b4a6901d77
ராணுவ வாகனம்மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்வகையில் தீவிரவாதிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவம். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ வாகனம்மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 30 பேரைச் சுட்டுகொன்றதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

அக்டோபர் 7ஆம் தேதி, பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ராணுவ வாகனம் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது, தெஹ்ரிக் -இ-தலிபான் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அதில், ஒன்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இரு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.

“உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், தீவிரவாதிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியா ஆதரவு பெற்ற 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்