இஸ்ரேல்மீதான தாக்குதல் தற்போது நிறுத்தப்படும்: ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல்மீதான தாக்குதல் தற்போது நிறுத்தப்படும்: ஈரான் அறிவிப்பு

1 mins read
ஏப்ரல் முதல் நடப்பில் இருந்த நேரடி சண்டைநிறுத்தம் மீறப்பட்டது
99af05b0-4721-4b22-8fc3-d56ef8e18358
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் ஈரான் தாக்குதல் நடத்தியபின் விளைந்த சேதத்தை அங்கு வாழும் இஸ்ரேலியர்கள் பார்வையிட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: ஈரானின் ராணுவத் தளபத்தியம், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக நடந்த ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக திங்கட்கிழமை (ஜூன் 8) அறிவித்தது.

ஏப்ரல் மாதம் முதல் நடப்பில் இருந்தவந்த இருநாடுகளுக்கு இடையிலான நேரடி சண்டை நிறுத்தம், தற்போது ஒன்றையொன்று தாக்கிக்கொண்டதால் முதன்முறையாக மீறப்பட்டது.

ஈரானின் ஏவுகணைத் தயாரிப்பு மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் விமானத் தாக்குதலை திங்கட்கிழமை நடத்தியது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்புகள்மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடியைக் கொடுத்துவிட்டதாக குறிப்பிட்ட ஈரான், ராணுவ நடவடிக்கைகள் அத்துடன் நிறுத்தப்படுவதை அதன் அரசாங்கத் தொலைக்காட்சியில் அறிவித்தது.

மீண்டும் தாக்குதல் தொடங்கலாம்

இருந்தபோதும், தென் லெபனான் உட்பட, ஈரானின் எந்தப் பகுதியும் மீண்டும் தாக்கப்பட்டால், இதைவிட மிக மோசமான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அது எச்சரிக்கை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்