உக்ரேன் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும்: ரஷ்யத் தற்காப்பு அமைச்சு

உக்ரேன் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும்: ரஷ்யத் தற்காப்பு அமைச்சு

படம்: ராய்ட்டர்ஸ்

05 Oct 2026 - 8:34 pm

1 mins read

மாஸ்கோ: உக்ரேன் தலைநகர் கியவ்விலும் பிற பகுதிகளிலும் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உள்ளதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்தது.

ரஷ்யாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள்மீதான தாக்குதல்களை உக்ரேன் அதிகரிக்க இருப்பதாக அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்ததற்குப் பதிலடியாக ரஷ்யா இதனைத் தெரிவித்துள்ளது.

கியவ்விலும் உக்ரேனின் பிற பகுதிகளிலும் உள்ள ராணுவத்தளங்கள், தற்காப்புத் தொழில் தளங்கள், அது தொடர்பான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யப் படைகள் தீவிரப்படுத்தும் என ரஷ்ய தற்காப்பு அமைச்சு கூறியது.

அதிபர் ஸெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.

மாஸ்கோ வகுத்துள்ள புதிய வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரேனியப் படைகள் தாக்குதலை அதிகரிக்கும் என்றும் எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்யப் பொதுமக்கள் தாக்கப்படமாட்டார்கள் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கியவ்வில் உள்ள உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் மீதான தாக்குதல்களும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்