கேன்பரா: பெர்த்திலிருந்து சிட்னிக்குச் செல்லும் விமானம் ஒன்றில் இடையூறு விளைவிக்கும் விதமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலிய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் நடத்தையால் அந்த விமானம் மீண்டும் பெர்த்துக்குத் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
பெர்த் நீதிமன்றம் அந்த 33 வயது ஆடவருக்கு 9,000 ஆஸ்திரேலிய டாலர் (S$7,800) அபராதம் விதித்தது. அதோடு, வீணான எரிபொருளுக்கு 8,630 ஆஸ்திரேலிய டாலரையும் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது.
விமான நிறுவனம் பற்றியும் அந்த ஆடவரின் செயல்கள் குறித்தும் எதுவும் வெளியிடப்படவில்லை.

