ஆஸ்திரேலியா: அமைதியாக நடந்த பழங்குடிச் சிறுமியின் இறுதிச்சடங்கு

ஆஸ்திரேலியா: அமைதியாக நடந்த பழங்குடிச் சிறுமியின் இறுதிச்சடங்கு

1 mins read
6f10beff-7917-4b2c-975a-f3c1993b6a37
கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் அஞ்சலி செலுத்திய பின்னர், பழங்குடியினரின் வழக்கப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டார்வின்: ஆஸ்திரேலியாவின் நார்தன் டெரிடரியில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி கொல்லப்பட்டார்.

அந்தச் சம்பவம் ஆலிஸ் ஸ்பிரிங் வட்டாரத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது. மேலும், நாடளவில் அது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) பழங்குடிச் சிறுமியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் அஞ்சலி செலுத்திய பின்னர், பழங்குடியினரின் வழக்கப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பழங்குடியினரின் வழக்கப்படி தங்களது இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இறந்துவிட்டால் நீண்ட நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் புறநகரில் உள்ள சமூக முகாம்களில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அங்கு வீட்டுவசதி, அடிப்படை வசதிகள் பல நேரங்களில் போதுமானதாக இல்லை.

சிறுமியைக் கொலை செய்ததாகவும் வேறு இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழும் 47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்