தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலிய தின ஆர்ப்பாட்டங்கள்: நினைவுச் சின்னங்கள் சேதம்

1 mins read
84b9a1d9-60e2-4531-b778-76d5a0b131a9
ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ஆம் தேதி, பழங்குடியினர் கொடி (இடது), ஆஸ்திரேலிய தேசிய கொடி ஆகிய இரண்டுமே சிட்னி துறைமுகப் பாலத்தில் நாட்டப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி 26ஆம் தேதி தொடங்குவதற்கு முன் மெல்பர்ன் நகரில் உள்ள இரு வரலாற்றுச் சிறப்புடைய சிலைகள் சேதமாக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் இந்நாள், கொண்டாடுவதற்கானதல்ல என்று கூறிவருகையில் அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் பத்தாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நாசவேலை நடந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது ஆகப்பெரிய நகரை நிறுவியவரான ஜான் பேட்மன் என்பவர், பழங்குடி மக்கள் பலரின் படுகொலைக்கும் காரணமாக இருந்தார். இந்நிலையில், அவரின் சிலை இரண்டு துண்டுகளாக்கப்பட்டதுடன் முதலாம் உலகப் போரின் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் நினைவுச் சின்னத்தின்மீது சிவப்புநிற சாயத்தில் பூசப்பட்டது.

ஆஸ்திரேலிய தினத்திற்கு முன்தினம் இரு நினைவுச்சின்னங்களும் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டதுடன் ‘மீண்டும் நிலம் வேண்டும்’ என்ற சொற்களும் எழுதப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சிட்னி கோவ் என்ற இடத்தில் கேப்டன் ஜேம்ஸ் கூக் வந்திறங்கியதும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு உள்ளானதையும் குறிக்கும் ஜனவரி 26ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் தேசிய தினமாக அனுசரிக்கப்பட்டாலும் அது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்குச் சர்ச்சைக்குரிய ஒரு தினமாக விளங்குகிறது.

மெல்பர்னின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் 30,000 வரையிலானோர் தெருக்களில் படையெடுத்து ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கக்கூடும் எனக் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்