தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடு, கால்நடைகள் அழிவு

1 mins read
a18f46b9-af39-4e2e-acf3-6e94e174a37b
தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதியன்று காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் தேசிய பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 10 மலையேறிகளும் அடங்குவர்.

காட்டுத்தீ காரணமாகக் குறைந்தது ஒரு வீடு அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கூடுதல் வீடுகள் அழிந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காட்டுத் தீ காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

பலத்த காற்று, கடும் வெப்பம் காரணமாக நவம்பர் 16ஆம் தேதியன்று ஏறத்தாழ 80 இடங்களில் காட்டுத்தீ மூண்டது.

தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

விக்டோரியா மாநிலத்தின் மேற்கு மற்றும் தென்பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பது சவால்மிக்கதாக உள்ளது என அதிகாரிகள் கூறினர்.

அப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 1,900 ஹெக்டர் பரப்பளவு நிலம் சேதமடைந்துவிட்டாகவும் தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் விக்டோரியா அவசரகால நிர்வாக ஆணையர் ரிங் நியூஜென்ட் தெரிவித்தார்.

காட்டுத்தீயின் விளைவாகச் சில விவசாயப் பண்ணைகள், கால்நடைகள் அழிந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்