தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு வெற்றி

1 mins read
57375730-48fa-4aa8-af33-d42b0a390b71
அ‌ஷ்வினி அம்பிகைபாகர். - காணொளிப் படம்: மீடியா365 / யூடியூப்

சிட்னி: இவ்வாண்டு ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவரும் அடங்குவார்.

அ‌ஷ்வினி அம்பிகைபாகர் என்ற இவர், ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பார்ட்டன் தொகுதியில் வென்றார். அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் சார்பில் அ‌ஷ்வினி போட்டியிட்டார்.

இவரின் பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். இவர், ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானம், சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவர்.

இவர் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது தொழிலாளர்கள் நியாயமாக நடத்தப்படுவதையும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதையும் உறுதி செய்தார் என்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அ‌ஷ்வினி ஒரு பகுதிக்கு கவுன்சிலராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் சமூகப் பணிகளுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ‌ஷ்வினி, கவிஞர் அம்பி அம்பிகைபாகரின் பேத்தியாவார்.

இவர், பார்ட்டன் தொகுதியில் 66 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றார்.

குறிப்புச் சொற்கள்