பணவீக்கத்தால் ஆஸ்திரேலிய மக்கள் அவதி; கூடுதல் நிவாரணம் அளிக்கப் பிரதமர் திட்டம்

1 mins read
35afcf43-19ff-4b8e-81e0-de0f701be6e5
சீனாவுடனான அனைத்து வர்த்தக இடையூறுகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திரு ஆண்டனி அல்பனிஸ் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: பணவீக்கம் உயர்ந்துள்ளதால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆஸ்திரேலியக் குடும்பங்களுக்கு ஆதரவாக வாழ்க்கைச் செலவினம் தொடர்பான புதிய நிவாரணத் திட்டங்களைத் தமது மத்திய இடதுசாரி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் 7.8% வரை எட்டியதை அடுத்து 2023ன் மூன்றாம் காலாண்டில் 5.4% என மெதுவடைந்தது.

இந்நிலையில், வரும் மே மாதம் ஆஸ்திரேலிய வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளதற்கு முன்னர் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சு கருத்தில் கொள்ளுமாறு சிட்னியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது திரு அல்பனிஸ் கூறினார்.

“மக்களுக்குக் கூடுதல் ரொக்கத்தை வழங்கினால் பணவீக்கம் மேலும் மோசமாகக்கூடும். அது பிரச்சினையைத் தீர்க்க உதவாது,” என்றார் திரு அல்பனிஸ்.

திரு அல்பனிஸ் தலைமையிலான அரசாங்கம் 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் $23 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$20.63) மதிப்பிலான நிவாரணத் திட்டத்தை அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்