அரசாங்க சாதனங்களில் ‘டீப்சீக்’ பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை

1 mins read
8e7dd188-5400-429e-8cf8-7cc39b7ff3fb
‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சீனாவால் தயாரிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் தொழில்நுட்ப சாதனங்களில் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறைகளின் அறிவுறுத்தலின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா தயாரித்த ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு மூலம் தரவுகள் திருட்டு, நச்சுநிரல் தாக்குதல் ஆகியவை ஏற்படாமல் இருக்க இதைச் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ‘டீப்சீக்’கின் பாதுகாப்பு குறித்து அக்கறை தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியா போல் இத்தாலி, தைவான் ஆகியவையும் நடவடிக்கை எடுத்துள்ளன.

அரசாங்கத்தின் தரவுகளை சில செயலிகள் மூலம் ஊடுருவ வாய்ப்புள்ளது அதனால் முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறோம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவை சீனா வெளியிட்டது. மலிவான விலையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு உலக பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்