தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023 - ஆஸ்திரேலியாவின் ஆக அதிக வெப்பமான 8வது ஆண்டு

1 mins read
bc2e740b-d712-40c3-88cd-f1963ca41d06
பருவநிலை மாற்றம் வானிலை உச்சநிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

கேன்பெரா: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை அந்நாட்டின் எட்டாவது வெப்பமான ஆண்டாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு நிலையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1961-1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்பநிலைகளோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அது மேலும் தெரிவித்தது.

மாறி வரும் பருவநிலையால் அங்கு வெள்ளம், சூறாவளி, காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்ததோடு, பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் வீசிய கடுமையான வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக அந்நாட்டில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், கோதுமையின் விளைச்சல் குறைந்தது.

கால்நடைகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் இறைச்சி ஏற்றுமதி அதிகரித்தது.

பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை முன்னுரைப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்