தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியில் ஆஸ்திரேலியர் சுட்டுக்கொலை

1 mins read
1d5316b3-6cb5-4100-a5ef-d5faa0d3c2ec
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்தோனீசியாவின் பாலித் தீவு. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

டென்பசார்: இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மற்றோர் ஆஸ்திரேலிய ஆடவரும் சுடப்பட்டுக் காயமடைந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நிகழ்ந்ததாகக் காவல்துறை, ஊடகங்களிடம் தெரிவித்தது.

துப்பாக்கிக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை பாலிக் காவல்துறை தேடி வருகிறது. துப்பாக்கிச்சூடு பாலியின் பண்டுங் வட்டாரத்தில் உள்ள பங்களா ஒன்றில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறைப் பேச்சாளர் அரியசாண்டி குறிப்பிட்டார். Detik.com செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானவர்கள் ஸிவன் ஆர், 32, என்றும் சனார் ஜி, 35, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸிவன் ஆர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மோசமான காயங்களுக்கு ஆளான சனார் ஜி, மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவ இடத்திலிருந்து இருவர் மோட்டார்சைக்கிள்களில் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் விவரித்தனர் என்று திரு அரியசாண்டி குறிப்பிட்டார். தப்பியோடியதாக நம்பப்படும் இருவரும் ஆஸ்திரேலிய பாணியில் ஆங்கிலம் பேசியதுபோல் கேட்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்