தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்பு செய்ய ‘டெல்ஸ்ட்ரா’ நிறுவனம் திட்டம்

1 mins read
4354607c-a325-4023-a368-eca72138174d
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ‘டெல்ஸ்ட்ரா’ ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ‘டெல்ஸ்ட்ரா’ ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.

மின்னிலக்கமயமாதல், தானியங்கி போன்ற மாற்றங்கள் காரணமாக கிட்டத்தட்ட 500 வேலைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

சில பழைய தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதை அந்நிறுவனம் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்ட இந்த ஆட்குறைப்பு, நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.

இந்த ஆட்குறைப்பு பழைய தயாரிப்புகளையும் சேவைகளையும் மீட்டுக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று. அத்துடன் அதிகரித்து வரும் மின்னிலக்க மயமாதல், தானியங்கி போன்ற புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறனைப் பெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதி எனவும் டெல்ஸ்ட்ராவின் பேச்சாளர் மின்னஞ்சலில் தெரிவித்தார்.

மேலும், அவர் “இதனால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படாது. மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்போது பணியாளர்கள் சிலர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதையும், புதிய பதவிகள் உருவாகுவதையும் காண முடியும். கிட்டத்தட்ட 472 வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்,” எனவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்