வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்க ஆஸ்திரேலிய தீவிர வலதுசாரித் தலைவர் உறுதி

வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்க ஆஸ்திரேலிய தீவிர வலதுசாரித் தலைவர் உறுதி

1 mins read
தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் வசிப்போருக்கு இது பொருந்தும்
a13cdd01-d50a-4eb2-b67f-f8e962754bef
ஒன் நே‌ஷன் கட்சித் தலைவர் போலீன் ஹேன்சன். - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஒன் நே‌ஷன், அந்நாட்டில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 750,000 குறைக்கப் பரிந்துரைத்துள்ளது.

மூவாண்டுகளில் அந்த இலக்கை அடைவது நோக்கமாகும். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், வீடமைப்பு நெருக்குதல் ஆகியவற்றின் தொடர்பில் எழுந்துள்ள அதிருப்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அக்கட்சி திட்டமிட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக மாணவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போர், திறனாளர்களாக விளங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் விசாக்களை, ஒன் நே‌ஷன் கட்சியின் திட்டம் குறிவைக்கும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கூடுதல் காலம் வசிக்க சம்பந்தப்பட்டோர் தற்காலிக விசா முறைகளைப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுப்பதும் சட்டவிரோதக் குடியேறிகளை அகற்றுவதும் இலக்கு என்று ஒன் நே‌ஷன் தலைவர் போலீன் ஹேன்சன் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் ஆட்சியில் இருக்கும் நடுஇடதுசாரி அரசாங்கத்தின் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான கொள்கையைப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் அறிவிக்கவுள்ளார்; அதற்கு சில நாள்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளதாக ஆஸ்திரேலியன் ஃபைனான்‌ஷியல் ரிவியூ ஊடகம் தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பான நெருக்குதல்களை மோசமாக்கக்கூடிய அதிவேக மக்கள்தொகை வளர்ச்சியைக் கையாள்வதன் தொடர்பில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அப்பிரச்சினைகளால் திருவாட்டி ஹேன்சனின் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஆஸ்திரேலியாவலதுசாரிவெளிநாட்டு ஊழியர்குடிநுழைவுஅரசாங்கம்