ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் குளம் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த திரு கொலின் டெவராக்ஸ் என்பவர், 3.2 மீட்டர் நீளமான முதலையால் தாக்கப்பட்டார்.
என்னசெய்வதென்று தெரியாமல் அவர் முதலையைக் கடித்தார்.
அறுபது வயது மதிக்கத்தக்க திரு டெவராக்ஸ், முதலையின் கண்ணைக் கடித்தபோதுதான் அதன் பிடியிலிருந்து அவர் விடுபட்டார்.
உயிர்பிழைத்த அவர் கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கியிருந்ததாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான ஏபிசி கூறியது. அவர் இந்த வாரம் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

