அரசு நடவடிக்கைகளால் ஆஸ்திரேலிய பெட்ரோல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு

அரசு நடவடிக்கைகளால் ஆஸ்திரேலிய பெட்ரோல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு

1 mins read
8d50b78e-1cb3-43ab-9cc2-4a10346f0065
ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்ரல் 19) முடிவடைந்த வாரத்தில் தேசிய சராசரி பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 5 விழுக்காடு குறைந்து 2.13 ஆஸ்திரேலிய டாலராக (S$1.94) இருந்தது. ஆனால், போர் தொடங்கிய மார்ச் மாதத் தொடக்கத்தைவிட இது இன்னும் ஏறத்தாழ 18 விழுக்காடு அதிகமாகவே உள்ளது என்று ஆஸ்திரேலியப் பெட்ரோலியக் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: மத்திய கிழக்குப் போரினால் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆஸ்திரேலிய அரசாங்க நடவடிக்கைகள் ஓரளவு தணித்துள்ள நிலையில், அந்நாட்டு பெட்ரோல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகக் குறைந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்ரல் 19) முடிவடைந்த வாரத்தில் தேசிய சராசரி பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 5 விழுக்காடு குறைந்து 2.13 ஆஸ்திரேலிய டாலராக (S$1.94) இருந்தது. ஆனால், போர் தொடங்கிய மார்ச் மாத தொடக்கத்தைவிட இது இன்னும் ஏறத்தாழ 18 விழுக்காடு அதிகமாகவே உள்ளது என்று ஆஸ்திரேலியப் பெட்ரோலியக் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை லிட்டருக்கு ஏறத்தாழ 3 விழுக்காடு குறைந்து 3.089 ஆஸ்திரேலிய டாலராக உள்ளது. முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்குக் குழுக்களை அனுப்புதல், எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளித்தல், டீசல் தரநிலைகளைத் தளர்த்துதல், எரிபொருள் வரிகளைக் குறைத்தல், அவசரகால இருப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு எரிபொருள் நெருக்கடியைக் குறைக்க ஆஸ்திரேலியா முயற்சி எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியர்கள் கார் பயன்பாட்டைக் குறைப்பதை ஊக்குவிப்பதற்காக விளம்பரப் பிரசாரம் ஒன்றையும் அது தொடங்கியுள்ளது. எரிசக்தியின் முக்கிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியா அதன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே பெறுகிறது. மேலும், வளர்ந்த நாடுகளில் மிகக் குறைவான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளதால், உலகளாவிய விநியோகத் தடைகளால் அது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்