ஆஸ்திரேலிய நீதிபதி ஒருவர், குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த பெண்ணை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறச் சொன்னது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் நடவடிக்கை கவனச்சிதறலை ஏற்படுத்துவதாக நீதிபதி கூறியதாக 'தி ஏஜ்' ஊடகம் குறிப்பிட்டது.
மத்திய மெல்பர்னில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
நீதிமன்ற அறையில் ஒரு பெரும் வழக்கு ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதைக் காண ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்திருந்தார்.
விசாரணைக்கு இடையில் நீதிபதி பெண்ணை வெளியேறச் சொன்னார்.
நீதிபதியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
நீதிமன்ற வளாகத்திற்குள் குழந்தை அனுமதிக்கபடுவது குறித்து அதிகாரிகளிடம் ஏற்கெனவே அனுமதி பெற்றுவிட்டதாக அப்பெண் கூறினார்.
இருப்பினும், நீதிபதியின் இந்தச் செயல் தமக்கு அதிர்ச்சி தருவதாக அப்பெண் கூறினார்.