தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்திற்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்; ஆடவர் கைது

1 mins read
2bf7884a-2998-4216-b0f5-ab9eeeac3f10
சிட்னியிலிருந்து மலேசியாவுக்குச் சென்ற மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பயணிகளை அச்சுறுத்தியதாக ஆஸ்திரேலிய ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) குற்றம் சுமத்தப்பட்டது. - காணொளிப்படம்: மேக்ரோக்ரூட்/எக்ஸ், ஜவத்நசீர்/எக்ஸ்

கேன்பரா: ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலிருந்து மலேசியாவுக்குச் சென்ற மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பயணிகளை அச்சுறுத்தியதாக ஆஸ்திரேலிய ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) குற்றம் சுமத்தப்பட்டது.

சிட்னியிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற எம்எச்122 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததையடுத்து அந்த விமானம் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு அவசரமாகச் சிட்னி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது எனக் காவல்துறை தெரிவித்தது.

அந்த விமானம் ஆஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது எனவும் அதில் 194 பயணிகளும் 5 விமானப் பணியாளர்களும் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் சிட்னிக்குத் திரும்பிய பின்னர் அந்த 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் வெடிபொருள்கள் வைத்திருப்பதாகப் போலி அச்சுறுத்தல் விடுத்ததற்காக அவர்மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறைத் தெரிவித்தது.

அவர் மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் A$15,000(S$13,200)க்கு மேல் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்