சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அமெரிக்க செல்லவுள்ளார்.
அல்பனிசின் பயணத்தின்போது அவர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடந்தால் அதிபராகத் திரு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரை முதல் முறையாக அல்பனிஸ் நேரில் சந்திக்கிறார்.
தலைவர்கள் இருவரும் சந்திக்கும்போது ஆக்கஸ் தற்காப்பு கூட்டமைப்பு மற்றும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாகப் பேசலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
திரு அல்பனிஸ் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நியூயார்க் புறப்படுவார் என்றும் அங்கு அவர் ஐக்கிய நாட்டு பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் பிரதமர் அல்பனிசுக்கு விருந்து கொடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

