மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பெண் தலைமையாசிரியர்

மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பெண் தலைமையாசிரியர்

1 mins read
ef1e8f4d-7bc6-422a-a6b1-aa6fd312fffc
-

ஆஸ்திரேலியாவில் மூன்று பெண் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மால்கா லேஃபர் என்பருக்கு எட்டு பிள்ளைகள் உள்ளனர்.

லேஃபருக்கு எதிராக 29 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2003க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் தலைமையாசிரியராக இருந்தபோது அப்பள்ளியில் பயின்ற மாணவிகள் மூவரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தபோது அவர்களை திருமணத்திற்காக தயார்ப்படுத்துவதாக லேஃபர் கூறியுள்ளார்.

லேஃபர் அனைத்து குற்றங்களையும் மறுத்துள்ளார்.