தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் நோயில் இருந்து தப்பிக்க கோலா கரடிகளுக்குத் தடுப்பூசி

1 mins read
7e243650-10b3-4de7-abe6-b23a9e8912cd
படம்: ஏபி -

கிளமிடியா என்னும் பாலியல் நோயில் இருந்து கோலா கரடிகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அவற்றுக்குத் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளமிடியாவால் கோலா கரடிகளுக்கு கண் பார்வை இழப்பு, மலட்டுத்தன்மை, உயிரிழப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த நோயால் அவற்றின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்படையக்கூடும் என்பதால் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 50 கோலாக்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட்டு அவற்றைக் கண்காணிக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

ஒருமுறைப் போடப்படும் அந்த தடுப்பூசி நன்றாக சோதனை செய்யப்பட்ட பிறகு தான் கோலாக் கரடிகளுக்கு போடப்படுவதாக விஞ்ஞானிகள் கூறினர்.

குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள 50 விழுக்காட்டு கோலா கரடிகள் கிளமிடியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பருவ நிலை மாற்றம், கட்டுத் தீ, நோய் போன்ற பல காரணங்களால் கோலா கரடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2050ஆம் ஆண்டில் அவை அழிவு நிலையை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்