ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சம்

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சம்

2027ல் வட்டி குறைப்புக்கு வாய்ப்பு
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 5:59 pm

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்ந்து இரண்டாவது மாதமாக அக்டோபரில் சரிந்ததை அடுத்து, வேலையின்மை விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவாக 4.9 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

இந்த எதிர்பாராத சரிவு, வட்டி விகிதங்கள் உச்சத்தை எட்டிவிட்டதையும், அடுத்த நடவடிக்கை வட்டி குறைப்பாகவே இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

2026ல் ஐந்து முறை வட்டி உயர்த்தப்பட்டதால் ரொக்க வட்டி விகிதம் 18 ஆண்டுகால உச்சமான 4.85 விழுக்காட்டை எட்டியது. 2027 பிற்பாதியில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் எனச் சந்தைகள் கணிக்கின்றன.

இதன் எதிரொலியாக, ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு 0.5 விழுக்காடு சரிந்து, பத்து மாதங்களில் இல்லாத அளவாக ஒரு ஆஸ்திரேலிய டாலருக்கு நிகரான அமெரிக்க நாணயத்தின் மதிப்பு 66.80 காசாகப் பதிவானது.

ஆஸ்திரேலியப் புள்ளியியல் அலுவலகத் தரவுகளின்படி, செப்டம்பரில் 36,400 வேலைகள் குறைந்த நிலையில், அக்டோபரில் மேலும் 43,500 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில், இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வேலை இழப்பு இதுவாகும். மேலும், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையர்களின் வேலையின்மை 11.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் தற்போது ஊழியர் சந்தையில் தெளிவாகத் தெரிவதாகவும் டேவிட் ஜோன்ஸ் போன்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பொருளியல் மந்தநிலையைக் காட்டுவதாகவும் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்