இங்கிலாந்து: பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதில் நெருக்கடி

இங்கிலாந்து: பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதில் நெருக்கடி

1 mins read
a26adc67-ed10-4540-9a14-3e7dfbfeb7f0
கோடை விடுமுறையில் குழந்தைகளைப் பராமரிக்க, வேலை செய்யும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். - படம்: அன்ஸ்பிளாஷ்

லண்டன்: சிறு குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோரை மீண்டும் பணியில் அமர்த்த பிரிட்டன் அரசாங்கம் தீவிரமாக முயற்சியெடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அரசாங்கம் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பள்ளிகள் மூடப்படும். அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளைப் பராமரிக்க வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

முழுநேரப் பணியிலுள்ள பெரும்பாலான அதிகாரிகளுக்கு குழந்தைகளின் விடுமுறைக் காலங்களில் அவர்களைப் பராமரிக்க போதுமான அளவு விடுமுறை வழங்கப்படுவதில்லை எனக் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனமான கோரமின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடை விடுமுறைக் காலம் ஆறு வாரங்கள் ஆகும். அந்த விடுமுறைக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு, வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு சராசரியாக £943 (1,630 சிங்கப்பூர் வெள்ளி) செலவாகும் என அந்தத் தரவு குறிப்பிடுகிறது.

பணிபுரியும் பெற்றோர்களுக்கு விடுமுறைக்கால குழந்தைப் பராமரிப்புச் செலவு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான அரசு மானியங்கள் பள்ளிகள் இயங்கும் காலங்களில் மட்டும்தான் குழந்தைகளைப் பராமரிக்க வழங்கப்படுகிறது. வேலை செய்யும் பெற்றோர்கள் எதிர்பார்க்கும் ஆண்டு முழுவதற்குமான பராமரிப்பு மானியத்தை அரசு வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்