ஷா ஆலம்: மக்களின் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், சமூக ஊடகங்களில் பிறரை அவமதிப்பது அல்லது இழிவுப்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நல்லொழுக்கம் என்பது வெறும் பண்புடன் நடந்துகொள்வது மட்டுமல்ல.
மாறாக, நாட்டின் நற்பெயரையும், பல இன, பல சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லெண்ணத்தைப் பேணுவதற்கான அடித்தளமாகும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
“ஒருவரை அவமதித்து, களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி போலியான புகைப்படங்களையும் காணொளிகளையும் உருவாக்குபவர்கள் உள்ளனர். நினைவில் வைத்து கொள்ளுங்கள், வெறுக்கப்பட்டு, இழிவுப்படுத்தப்படும் ஒவ்வொரு நபருக்கும் குடும்பம், சுயமரியாதை மற்றும் உணர்வுகள் இருக்கின்றது,” என்றார் மாமன்னர்.
சனிக்கிழமையன்று (அக்டோபர் 17), சிலாங்கூர், ஷா ஆலமில் நடைபெற்ற மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 105வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சுல்தான் இப்ராஹிம் அதனை கூறினார்.
தகவல்களைப் பகிர்வதற்கு முன்னதாக, அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு மாமன்னர் நினைவூட்டினார்.
