பெட்டாலிங் ஜெயா: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டுகள் நடைபெறவுள்ள நிலையில், பூப்பந்தாட்டம் நீக்கப்பட்டது குறித்து மலேசியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுகளில் மலேசியா பங்கேற்கத் தேவையில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
வழக்கமாக இந்த விளையாட்டில் சிறப்பாக ஆடும் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய நாடுகள் எல்லாம் காமன்வெல்த் விளையாட்டுகளிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று இணையவாசிகள் சிலர் பதிவிட்டனர்.
பூப்பந்தாட்டம், சுவர்ப்பந்து, ஹாக்கி, முக்குளித்தல் ஆகியவை உள்பட சில விளையாட்டுகளை நீக்க காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் நாடு முடிவெடுத்ததை அடுத்து, மலேசியா பதக்கம் வெல்லச் சிரமப்படலாம் என்று முன்னதாகக் கூறப்பட்டது.
1966ஆம் ஆண்டு முதல் 14 முறை நடைபெற்று வந்துள்ள காமன்வெல்த் விளையாட்டுகளில், பூப்பந்தாட்டம் நீக்கப்பட்டதில்லை.