அதானி நிறுவனங்களில் 90% பங்கை வாங்குகிறது பெய்ன்

அதானி நிறுவனங்களில் 90% பங்கை வாங்குகிறது பெய்ன்

1 mins read
c8246c49-b303-4a14-a858-4fb858756ac5
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பெருஞ்செல்வந்தரான கௌதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனம் ஒழுங்கற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டியது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு: ‘அதானி கேப்பிடல்’, ‘அதானி ஹௌசிங்’ நிறுவனங்களில் 90 விழுக்காட்டுப் பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளதாக அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள முதலீட்டு நிறுவனமான ‘பெய்ன் கேப்பிடல்’ கூறியிருக்கிறது.

திரு கௌரவ் குப்தா அதன் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாகியாகவும் தொடர்ந்து இருப்பார் என்றும் ‘அதானி கேப்பிடல்’ நிறுவனத்தில் மீதமுள்ள 10 விழுக்காட்டுப் பங்குகளைத் தக்கவைத்துக்கொள்வார் என்றும் பெய்ன் தெரிவித்தது.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், பெருஞ்செல்வந்தரான கௌதம் அதானிக்குச் சொந்தமான அதானி கேபிடல் நிறுவனம் ஒழுங்கற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக அதானி நிறுவனம் நெருக்கடியை எதிர்நோக்கியது. இவ்வேளையில் அந்நிறுவனத்தின் மீதான அதன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது, பெய்ன்.

பெய்ன்னைப் போன்ற ஒரு நம்பகமான முதலீட்டு நிறுவனம் தமது நிறுவனத்தில் அடியெடுத்து வைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அதானி குழுமத்தின் தலைவரான திரு அதானி கூறினார். இதனால் இப்போதிலிருந்து நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சிகாணும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்