விமானத்தில் ரொட்டிக்கு மாவு பிசைந்த பயணிக்கு எதிராக விமர்சனம்

விமானத்தில் ரொட்டிக்கு மாவு பிசைந்த பயணிக்கு எதிராக விமர்சனம்

1 mins read
e5ae0eff-f0d8-49e6-a666-2aa31b2daa2f
விமானத்தில் பயணி ஒருவர் ரொட்டிக்கு மாவு பிசைவதைக் காட்டும் காணொளி இன்ஸ்டகிராமில் வலம் வந்தது. - படம்: இன்ஸ்டகிராம்/leafandloafco

அண்மையில் விமானத்தில் பயணி ஒருவர், ரொட்டிக்கு மாவு பிசைவதைக் காட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டகிராமில் வலம் வந்தது.

சமூக ஊடகங்களில் பரவலான அந்தக் காணொளியில், “ஸ்பெயினுக்கு விமானப் பயணத்தின்போது ரொட்டிக்கு மாவு பிசைகிறேன்,” என்ற வாசகம் இடம்பெற்றது.

“புத்தம்புது ரொட்டியுடன் என் சகோதரியை ஆச்சரியப்படுத்தப் போகிறேன்,” என்றும் அப்பயணி அக்காணொளியில் கூறுகிறார்.

அதன்படி, பெரிய கிண்ணம் ஒன்றில் தண்ணீர், மாவு, உப்பை அவர் சேர்த்து கலக்குகிறார். அந்த மாவைப் பிசைந்த பின்னர் அதை ஊறவைக்க சற்று நேரம் அக்கிண்ணத்தை அவர் மூடி வைத்தார்.

கேமராவுக்கு முன் மாவைக் காண்பித்த அப்பயணி, அதை இழுத்து வெவ்வேறு கோணங்களில் கவனமாக மடித்தார்.

View post on Instagram
 

இந்நிலையில், அக்காணொளி இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அப்பயணியின் இன்ஸ்டகிராம் பதிவை விமர்சித்து கருத்து கூறியுள்ள இணையவாசிகள், விமானப் பயணித்தின்போது இத்தகைய ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டதற்குக் கண்டித்தனர்.

அக்கருத்துகளுக்குப் பதிலளித்த அப்பயணி, தம் செயலின் பின்விளைவுகளை அறியாததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்