தாயைக் கொன்று பயணப்பெட்டிக்குள் மறைத்த மகள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
d0821a5f-532e-4b35-9ffd-e296aa655433
படம்: ஏஎஃப்பி -

தாயைக் கொன்று பயணப்பெட்டிக்குள் மறைத்த மகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீத்தர் மேக் (27). அவர் 2014ஆம் ஆண்டு தமது 62 வயது தாய் செய்லா வான் வீசா மேக்குடன் பாலி சென்ருந்தார்.

ஹீத்தர் மேக்கின் காதலர் டாமி ஸ்கேபெரும் பாலியில் இருந்தார்.

ஹீத்தர் மேக் கர்ப்பமாக இருந்ததால் செய்லா வானுக்கும் டாமிக்கும் ஹோட்டல் அறையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த டாம் செய்லா வானைத் தாக்கி கொன்றார்.

காதலருடன் இணைந்து தாயின் உடலை பயணப்பெட்டிக்குள் மறைத்துவைத்து ஒரு டாக்சிக்குள் வைத்துவிட்டு காதல் ஜோடி தப்பியோடியது.

அவர்கள் மீதான குற்றம் 2015ஆம் ஆண்டு இந்தோனீசிய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஹீத்தர் மேக்குக்கு 10 ஆண்டும் டாமிக்கு 18ஆண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹீத்தர் மேக் கர்ப்பமாக இருந்ததாலும் நன்னனடத்தையை கருதிய அவர் விடுதலை செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அவர் அமெரிக்காவிற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு தற்போது கூடுதலாக 28 ஆண்டுகள் அமெரிக்காவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்