வெளிநாட்டுப் பயணிகள் மோட்டார்சைக்கிள் ஓட்டத் தடைவிதிக்கும் தீவு

வெளிநாட்டுப் பயணிகள் மோட்டார்சைக்கிள் ஓட்டத் தடைவிதிக்கும் தீவு

1 mins read
b6ec91fb-bcf1-4e8c-a72f-6069a83208be
பாலித் தீவின் நுசா துவாவில் போக்குவரத்துக்கு வழிகாட்டும் காவல்துறை அதிகாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

போக்குவரத்து விதிகளைச் சரிவர பின்பற்றாத மோட்டார்சைக்கிளோட்டிகளால் பிரபல சுற்றுலாத் தலமான பாலித் தீவுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

காயங்களையும் மரணங்களையும் ஏற்படுத்திய தொடர் விபத்துகளை அடுத்து, வெளிநாட்டுப் பயணிகள் பாலித் தீவில் மோட்டார்சைக்கிள் ஓட்ட இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

"அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்வதே இல்லை. சுற்றுப்பயண சேவைத் துறை ஏற்பாடு செய்யும் போக்குவரத்து முறையை மட்டுமே வெளிநாட்டவர்கள் பயன்படுத்த இனி அனுமதிக்கப்படுவர்," என்று ஆளுநர் வாயான் கோஸ்டர் திங்கட்கிழமை (மார்ச் 13) கூறினார்.

வெளிநாட்டுப் பயணிகள் மோட்டார்சைக்கிள் ஓட்ட தடை எவ்வளவு காலம் நடப்பில் இருக்கும் என்பது பற்றித் தெரியவில்லை.

வெளிநாட்டுப் பயணிகள் மோட்டார்சைள் மோட்டார்சைக்கிள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்களது விசாவை ரத்து செய்யக் கோரும் அதிகாரத்தைப் பெற சட்ட அமைச்சின் ஆதரவை திரு கோஸ்டர் நாடியுள்ளார்.

பாலித் தீவில் அண்மைக்காலமாக மோட்டார்சைக்கிள் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மதுபோதையில் மோட்டார்சைக்கிள் ஓட்டி, உள்ளூர் மோட்டார்சைக்கிளோட்டிக்குக் காயம் விளைவித்த ரஷ்யப் பயணி கடந்த மாதம் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டார்.

ஜனவரியில் உக்ரேனிய, ரஷ்யப் பயணிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.