மெக்சிகோ பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை

மெக்சிகோ பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை

படம்: பிக்சாபே

23 Sep 2026 - 11:53 am

1 mins read

மெக்சிகோ சிட்டி: பள்ளிகளில் மாணவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை மெக்சிகோ அரசாங்கம் புதன்கிழமை (செப்டம்பர் 22) வெளியிட்டுள்ளது.

திரைப் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துவரும் சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுக் கல்விமுறைக்குப் பொருந்தும் இவ்விதிமுறைகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் கைப்பேசி, 'டேப்லட்’ எனும் சிறிய அளவிலான திறன்கருவிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த விதிமுறைகள் நவம்பர் 3ஆம் தேதி நடப்புக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து மாநிலக் கல்வி அதிகாரிகளிடையே கருத்திணக்கம் எட்டப்பட்டுள்ளதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் திங்கட்கிழமை தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிகள் பாதுகாப்பான முறையில் கல்வி நோக்கங்களுக்காகச் சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையான வரம்புகளைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளின் மனநலன், கற்றல், சமூக அமைப்பைப் பாதுகாப்பதில் இந்த உடன்பாடு ஒரு முக்கியப் படியாகும் என அந்நாட்டின் கல்வி அமைச்சர் மரியோ டெல்காடோ குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் குறைக்கப் பல நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், மெக்சிகோவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மெக்சிகோகைப்பேசிவிதிமுறைதடை