‘வெளிநாட்டு ஊழியர்கள் சமைக்கக்கூடாது; சுத்தம் செய்தால் போதும்’

1 mins read
a59e92e1-1f8e-465e-b0d9-5b35b9957fc2
வெளிநாட்டு ஊழியர்கள் உணவங்காடிக் கடைகளில் முக்கியச் சமையல்காரராக வேலை செய்வதற்கான தடை, பினாங்கில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

வெளிநாட்டு ஊழியர்கள் உணவங்காடிக் கடைகளில் சமையல் செய்வோராக இருப்பதை சிலாங்கூர் மாநிலம் தடைசெய்யப் பரிசீலனை செய்துவருகிறது.

சிறிய அளவிலான வர்த்தகங்கள் உள்ளூர்வாசிகளால் மட்டுமே நடத்தப்படுவதை இந்தத் தடை விதிப்பு உறுதிசெய்யும்.

அத்துடன் மலேசிய உணவின் உண்மையான சுவையையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பங்குதாரர்கள் கூறியுள்ளனர்.

“வெளிநாட்டவர் சுத்தம் செய்வதையும் உணவு தயாரிப்பதையும் மட்டும் பார்த்துக்கொள்ள வேலையில் அமர்த்தப்பட வேண்டும்; சமைக்கக்கூடாது,” என்றார் மலேசிய உணவங்காடிக் கடைக்காரர்கள் சம்மேளனம் மற்றும் சில்லறை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான்.

சமையல் முறையையும் பாரம்பரியத்தையும் தற்காக்கும் கடமை மலேசியர்களையே சாரும் என்ற கருத்தை முன்வைத்தார் அவர்.

உள்ளூர் சமையல்காரர் ஒருவரை வேலையில் அமர்த்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரோஸ்லி, ஒரு நாளுக்கு 100 முதல் 120 ரிங்கிட் சம்பளம் வழங்கலாம் என்று பரிந்துரைத்தார்.

வெளிநாட்டு ஊழியர்கள் உணவங்காடிக் கடைகளில் முக்கியச் சமையல்காரராக வேலை செய்வதற்கான தடை, ஏற்கெனவே பினாங்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்