டாக்கா: ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியுடைய மாணவர் அணியை பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் தடை செய்துள்ளது.
பங்ளாதேஷ் சாத்ரா லீக் என்று அழைக்கப்படும் அந்த மாணவர் அணி பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
அண்மையில், பங்ளாதேஷ் எங்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதை அடுத்து, ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்தது.
அவர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
தற்போது அவர் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அருகில் தஞ்சம் அடைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 15 ஆண்டுகளாக பங்ளாதேஷ் சாத்ரா அணி வன்முறையில் ஈடுபட்டதாகவும் மக்களுக்குத் தொல்லை விளைவித்ததாகவும் நாட்டின் வளங்களை சூறையாடியதாகவும் பங்ளாதேஷ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.