பங்ளாதேஷ் தேர்தல்: தோல்வியை ஒப்புகொண்ட இஸ்லாமியக் கட்சி

பங்ளாதேஷ் தேர்தல்: தோல்வியை ஒப்புகொண்ட இஸ்லாமியக் கட்சி

1 mins read
d32bcf4f-515c-4e53-b0e8-bdba0c53b383
ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிக்குர் ரஹ்மான். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி, பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவதாகச் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 14) அறிவித்துள்ளது.

அந்நாட்டில் பிப்ரவரி 12ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.

அக்கட்சி வெற்றி பெற்றதில் சந்தேகம் இருப்பதாகவும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி நடந்திருப்பதாகவும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிக்குர் ரஹ்மான் பிப்ரவரி 13ஆம் தேதி குற்றஞ்சாட்டினார்.

மேலும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்கப் போவதாகவும் அவர் சொன்னார். 

இந்நிலையில், எதிர்த்தரப்பின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகத் தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

“உண்மையான மக்களாட்சிப் பயணத்தில், ஒரு கட்சியின் தலைமைக்கு வைக்கப்படும் சோதனை அது தேர்தலில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்கிறது என்பது மட்டுமன்று, மக்களின் தீர்ப்பை அக்கட்சி எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதும் அதில் அடங்கும்,” எனத் திரு ரஹ்மான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட இளையர் எழுச்சிக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்