டாக்கா: பங்ளாதேஷ், ஆகப் பெரிய இஸ்லாமியக் கட்சி அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. முன்னாள் அரசாங்கத்தால் அகற்றப்பட்ட கட்சி கிட்டத்தட்ட பத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் தேர்தல்களில் களமிறங்க முடியும்.
ஜமாத் - அ - இஸ்லாமிக் கட்சியின் பதிவை ரத்து செய்யும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஜமாத் - அ - இஸ்லாமிக் கட்சி அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்பட்டது.
“சட்டப்படி கட்சியின் பதிவுகளைக் கையாள தேர்தல் ஆணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் ஆணைய வழக்கறிஞர்.
முஸ்லிம்கள் அதிகம் உள்ள 170 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பங்ளாதேஷில் ஜனநாயக முறைப்படி அனைவரையும் உள்ளடக்கிய பலக் கட்சி முறைகொண்ட தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தின் முடிவு வழியமைத்துள்ளது என்று ஜமாத் - அ - இஸ்லாமிக் கட்சியின் வழக்கறிஞர் கூறினார்.
“நாடாளுமன்றம் ஆக்ககரமான விவாதங்களால் துடிப்புடன் இயங்க பங்ளாதேஷ் மக்கள், இனம், சமய அடையாளங்களைத் தாண்டி ஜமாத் கட்சிக்கு வாக்களிப்பர் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, 2013ஆம் ஆண்டு தன் மீது உயர் நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு விதித்த தடையை நீக்கும்படி கட்சி மேல்முறையீடு செய்தது.
திருவாட்டி ஹசினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சியின் பரம வைரியாக ஜமாத் - அ - இஸ்லாமிக் இருந்தது.
அந்தக் கட்சிமீது தமது ஆட்சிக் காலத்தின்போது திருவாட்டி ஹசினா தடை விதித்ததோடு அதன் தலைவர்களையும் ஒடுக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மே மாதம், பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதித்தது.

