தாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசதந்திர கடப்பிதழை பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
ஹசினாவைப் போல் அவரின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் அரசதந்திர கடப்பிதழ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு ஹசினாவின் கொள்கைகளுக்கு எதிராக பங்ளாதேஷில் போராட்டம் வெடித்தது. அதில் 450க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து ஹசினா விலகினார்.
பங்ளாதேஷை 15 ஆண்டுகள் ஆண்ட திருவாட்டி ஹசினா ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் முகம்மது யூனுஸ், பங்ளாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கத்தை ஆகஸ்டு 8 அன்று அமைத்தார். அவரது தலைமையில் பங்ளாதேஷில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.