தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பேட்மேன்’ நடிகர் வேல் கில்மர் காலமானார்

1 mins read
45f91393-1363-426b-8a42-3259e20fae02
வேல் கில்மர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வேல் கில்மர் காலமானார்; அவருக்கு வயது 65.

கில்மர், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் காலமானார் என்று அவரின் மகள் மர்செடிஸ் கில்மர் தெரிவித்தார். நிமோனியா நோய்க்கு அவர் பலியானதாக மகள் கூறினார்.

கில்மருக்குத் தொண்டை புற்றுநோய் இருந்தது 2014ஆம் ஆண்டு தெரியவந்தது. பின்னர் அவர் அதிலிருந்து குணமடைந்ததாக மர்செடிஸ் கில்மர் தெரிவித்தார்

கில்மர், 1995ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் ஃபரெவர்’ (Batman Forever) படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். முன்னதாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கல் கீட்டனிடமிருந்து கில்மர் அந்தப் ‘பொறுப்பை’ எடுத்துக்கொண்டு ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தார்.

மேலும், 1991ஆம் ஆண்டு வெளியான ‘தி டோர்ஸ்’ (The Doors) படத்தில் ஜிம் மோரிசன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தினார். ‘டாப் கன்’, ‘தண்டர்ஹார்ட்’ (Top Gun, Thunderheart) உள்ளிட்ட படங்களில் நடித்தும் பிரபலமாகத் திகழ்ந்தார் கில்மர்.

குறிப்புச் சொற்கள்