தோக்கியோ: ஜப்பானின் மேபாஷி நகரில் கரடி ஒன்று சுற்றித் திரிவதாகவும் குறைந்தது ஒருவர் தாக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கரடியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த இரண்டு கரடிகளில், ஒரு குட்டிக் கரடியை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதன் தாயாகக் கருதப்படும் கரடியைத் தேடும் பணி தொடர்கிறது.
மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு நகர மேயர் அகிரா ஒகாவா வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் 50 வயது ஆடவர் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நவம்பர் 18ஆம் தேதி நகரப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் உணவுத் தட்டுப்பாடு, கிராமப்புற மக்கள்தொகைக் குறைவு ஆகியவற்றால் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாடு முழுவதும் கரடிகள் தென்படும் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
