பெலருஸ் அதிபர் வடகொரியா பயணம்

பெலருஸ் அதிபர் வடகொரியா பயணம்

1 mins read
1d1ca260-9f6a-4ee1-ac35-80240ca46a76
பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷென்கோவுடன் (வலது) வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். - படம்: ஏஎஃப்பி

பியோங்யாங்: பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷென்கோ வடகொரியாவுக்கு முதன்முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அவரை வரவேற்றதாக வியாழக்கிழமையன்று (மார்ச் 26) தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமையன்று (மார்ச் 25) கிம் இல் சுங் சதுக்கத்தில் திரு லுக்காஷென்கோவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரு கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் வைக்கப்பட்டுள்ள கும்சுசான் சூரிய அரண்மனைக்கு வடகொரியாவின் உயரதிகாரிகளுடன் சென்ற திரு லுக்காஷென்கோ அங்கு தமது மரியாதையைச் செலுத்தினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சார்பாக அவர் அங்கு மலர்க்கொத்து வைத்து மரியாதை செய்தார்.

மற்றொரு நிகழ்வில், விடுதலைக் கோபுரத்தில் அதிபர் லுக்காஷென்கோ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்