பொது நீச்சல்குளங்களில் மேலாடையின்றி நீந்த விரைவில் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்று ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
திறந்தவெளி நீச்சல்குளத்தில் மேலாடை அணியாமல் இருந்ததற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பெண் சட்ட நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து நீச்சல்குள விதிமுறையில் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் குறித்து வாதிட்ட அந்தப் பெண், ஆண்களைப் போலவே பெண்களும் மேலாடையின்றி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.
இதையடுத்து, பெர்லின் நகரில் உள்ள பொது நீச்சல்குளங்களை நிர்வகிக்கும் Berliner Baederbetriebe எனும் நிறுவனம், நீச்சலின்போது ஆடை அணிவதன் தொடர்பிலான அதன் விதிமுறைகளை மாற்றியுள்ளது.
புதிய விதிமுறைகள் எப்போது நடப்புக்கு வரும் என்பது பற்றி தெரியவில்லை.


