சைஃபுதீன் அப்துல்லாவைப் பதவிநீக்கம் செய்த பெர்சத்து

1 mins read
77aac6aa-b3e4-4921-a189-ac9ce3fde817
பதவிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக திரு சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்தார். - படம்: சாவ்பாவ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சியான பெர்சத்துவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சைஃபுதீன் அப்துல்லா அக்கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைப் பெர்சத்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) உறுதிப்படுத்தியது.

பதவிநீக்கம் குறித்த ஆவணம் தமக்கு செவ்வாய்க்கிழமை மாலை கொடுக்கப்பட்டதாக அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினராக இருந்த திரு சைஃபுதீன் கூறினார்.

கட்சி எடுத்துள்ள முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (ஜனவரி 5) பெர்சத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

திரு சைஃபுதீனைப் பதவி நீக்கம் செய்ய அக்கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது.

பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து திரு முகைதீன் யாசினை அகற்ற தீட்டப்பட்ட சதியுடன் திரு சைஃபுதீனுக்குத் தொடர்பு உண்டு என்று பெர்சத்து கட்சி குற்றம் சுமத்தியது.

இதையடுத்து, அவரிடம் அக்கட்சி கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தியது.

குறிப்புச் சொற்கள்