பிரேசில் வௌவால்களில் பேட்டாகொரோனா கிருமி

1 mins read
33619920-e27b-4623-8e68-4a39e9f1a2ff
கொவிட்-19, மெர்ஸ் ஆகிய கிருமித்தொற்றில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமி, பிரேசில் வௌவால்களில் கண்டறியப்பட்டது. - படம்: பிக்சபே

நியூயார்க்: கொவிட்-19, மெர்ஸ் ஆகிய தொற்றுநோய்களுக்கு அடிப்படை காரணமாக உள்ள கிருமிகள் பிரேசிலில் உள்ள வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிஆர்செட் பேட்கோவ் (BRZ batCoV) என்ற அந்த வகை கிருமி லத்தின் அமெரிக்காவில் உள்ள பூச்சிகளை உண்ணும் வௌவால்களில் காணப்பட்டது. மரன்ஹாவ், சாவ் பாவ்லோ ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வில் பிரேசில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிருமி சார்ஸ், மேர்ஸ் ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் பேட்டாகொரோனா கிருமி குடும்பத்தைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள வௌவால்களில் இதற்குமுன் அத்தகைய கிருமிகள் கண்டறியப்படவில்லை. தென் அமெரிக்காவில் உள்ள வௌவால்களில் அந்தக் கருமி தானாக உருமாறியிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சார்ஸ்-கோவ்-2 பெருந்தொற்றின்போது அதற்குக் காரணமான கிருமி ஆய்வுக்கூடத்தில் உருமாற்றப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர். ஆனால், அத்தகைய கிருமி இயற்கையாகவே விலங்குகளிடம் உருமாறக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை அண்மைய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியது.

அதுபோன்ற கிருமி ஆசியா, ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு ஆகியவற்றில் உள்ள வௌவால்களிடையே கண்டறியப்பட்டிருக்கிறது.

பிரேசில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிருமி மனிதர்களைப் பாதிப்பதற்கான சான்றுகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்