இந்தியாவுக்குச் செல்லவிருக்கிறார் பைடன்

இந்தியாவுக்குச் செல்லவிருக்கிறார் பைடன்

1 mins read
f7ed127a-0036-4971-b8b4-68aba7ae54b1
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (இடது) செம்டம்பர் 7 முதல் செப்டம்பர் 10 வரை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்வார். துணை அதிபர் கமலா ஹேரிஸ் (வலது) ஆசியான் மாநாட்டுக்காக செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7 வரை ஜகார்த்தா செல்வார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செம்டம்பர் 7 முதல் செப்டம்பர் 10 வரை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா செல்வார் என்றும் துணை அதிபர் கமலா ஹேரிஸ் தென்கிழக்காசிய தலைவர்கள் மாநாடுகளுக்காக செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7 வரை ஜகார்த்தா செல்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

பிரிக்ஸ் நாடுகள் ஜொஹனஸ்பர்க்கில் மாநாடு ஒன்றை நடத்தியிருக்கும் நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் அந்தப் பயணங்கள் குறித்து அறிவித்தார்.

ஜி-20 மாநாட்டுக்கான அமெரிக்காவின் கடப்பாட்டை அதிபர் மறுஉறுதிப்படுத்துவார் என்று திரு சுல்லிவான் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதோடு 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா ஜி-20 மாநாட்டை ஏற்றுநடத்த கடப்பாடு தெரிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்