வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த பேத்தி புதன்கிழமையன்று (ஜனவரி 8) கலிஃபோர்னியாவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதன்மூலம் பாட்டனாரானார் அதிபர் பைடன்.
தமது பேத்தியான நயோமி பைடன், நீல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக முதலில் தவறாகக் கூறிய அதிபர் பைடன், உடனடியாக தாம் கூறியதைத் திருத்தி ஆண் குழந்தை பிறந்ததாகச் சொன்னார்.
அதிபர் பைடனின் மனைவியான திருவாட்டி ஜில் பைடன் புதிதாகப் பிறந்த குழந்தையின் படத்தைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
குழந்தைக்கு வில்லியம் பிரேனன் நீல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.