அமெரிக்க அதிபர் பாதுகாப்பு வாகனம்மீது கார் மோதி விபத்து

அமெரிக்க அதிபர் பாதுகாப்பு வாகனம்மீது கார் மோதி விபத்து

1 mins read
0b41f632-7e1c-451f-b7dd-c3b11cb1c41f
பாதுகாப்பு வாகனம்மீது மோதி நின்ற சாம்பல் நிற செடான் காரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வில்மிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவருடைய துணைவியாரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வில்மிங்டனில் இருக்கும் பிரச்சார தலைமையக கட்டடத்திலிருந்து வெளியேறியபோது அவருடைய பாதுகாப்பு வாகனம்மீது கார் ஒன்று மோதியது.

இந்த விபத்தால் அமெரிக்க அதிபருக்கும் அவருடைய துணைவியாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருந்தனர் எனவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

திரு. பைடனும் ஜில் பைடனும் பிரச்சார தலைமையக கட்டடத்தில் ஊழியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு அருந்திவிட்டு அமெரிக்க நேரப்படி இரவு 8.07 மணியளவில் அவ்விடத்தைவிட்டுச் சென்றதாகவும் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் இவ்விபத்து நடந்ததாகவும் வெள்ளை மாளிகை கூறியது.

சம்பவ இடத்திலிருந்து பைடனையும் அவருடைய துணைவியாரையும் அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு வில்மிங்டனில் இருக்கும் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் எனவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜோ பைடன்விபத்து