அதிபர் பைடன் மகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது

அதிபர் பைடன் மகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது

1 mins read
8e5c8f96-5749-4baf-95a8-3a203688f4b5
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் அவர் மகன் ஹன்டர் பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன். அவர் 2018ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கும் போது வழங்கப்பட்ட படிவத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து பொய் சொல்லியுள்ளார்.

அது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் ஹன்டர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியில் இருக்கும்போதே அவரின் மகன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

தீர்ப்பை எதிர்த்து ஹன்டர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். தமது நிர்வாகம் சட்டவிரோதமாக துப்பாக்கி கடத்தல் மற்றும் அதன் சார்ந்த வன்முறை குற்றங்களைக் கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பைடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்