தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிசையில் நின்று கமலா ஹாரிசுக்கு வாக்களித்த பைடன்

1 mins read
3b574b37-bc52-4d23-8744-195f18f59713
வாக்களிக்க வரிசையில் நின்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (இடது), சக்கரநாற்காலி பயன்படுத்திய பெண்மணி ஒருவருக்கு உதவினார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூகாசல், டெலவேர்: அமெரிக்கர் அதிபர் தேர்தலை முன்னிட்டு டெலவேர் மாநிலத்தில் வாக்களிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், அக்டோபர் 28ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்குச் சாவடி திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 100க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றதாகவும் அவர்களில் ஒருவர் திரு பைடன் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் பைடன் தமக்குத் தாமே வாக்களித்துக்கொண்டார்.

அப்போது அவரது மனைவி டாக்டர் ஜில் பைடனும் அவருடன் இருந்து வாக்களித்தார்.

ஆனால் இம்முறை அவர் வாக்களிக்க தமது கணவருடன் சேர்ந்து வாக்குச் சாவடிக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன்பு கமலா ஹாரிசுக்குப் பதிலாக திரு பைடன் அதிபர் தேர்தல் வேட்பாளராக இருந்தார்.

ஆனால் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான விவாதத்தில் திரு பைடன் மிக மோசமாகத் தடுமாறியது அவரது ஆற்றலைச் சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்தது.

இதையடுத்து, தேர்தலிலிருந்து திரு பைடன் விலகினார்.

அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

இத்தேர்தலில் போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்