தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூ ஹேம்ஷியரில் எழுத்துபூர்வ வாக்கெடுப்பின் மூலம் பைடன் வெற்றி: முன்னுரைப்புத் தகவல்

1 mins read
7ddc3fb8-570a-4813-81cd-061614aff459
இயக்கப் பேரணியின்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர், நியூ ஹேம்ஷியர்: வாக்கெடுப்புப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பெயர் இடம்பெறாதபோதும் எதிர்பாராத விதமாக ஜனநாயகக் கட்சியினர் எழுத்துபூர்வமாக வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

பைடனின் அரசியல் செல்வாக்கை எடுத்துக்காட்டும் விதமாக இது அமைந்துள்ளது.

வாக்கெடுப்புப் பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் டீன் பிலிப்ஸ், மரியேன் வில்லியம்சன் ஆகியோர் இடம்பெற்றபோதும் திரு பைடனை வெற்றியாளர் என்று ‘எடிசன் ரிசர்ச்’ முன்னுரைத்துள்ளது.

நியூ ஹேம்ப்ஷியர் ஜனநாயகவாதிகள் தீவிரமாக மேற்கொண்ட எழுத்துபூர்வ இயக்கத்தின் பலனாக அதிபருக்கு இந்த வெற்றி கிட்டியுள்ளது.

எழுத்துபூர்வ இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களது ஒன்றுகூடலில், திரு பைடன் வெற்றி பெறுவார் என்று அறிந்த கூட்டத்தினர் உற்சாக முழக்கமிட்டனர்.

வாக்கெடுப்பில் திரு பைடனுக்கு 68 விழுக்காடும் திரு பிலிப்சுக்கு சுமார் 20 விழுக்காடும் கிடைத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்