டுரியான், சிக்கன் ரைஸ், சாத்தே உணவுவகைகளை ருசித்த பில் கேட்ஸ்

1 mins read
54a45995-1a6e-4e44-8923-e8da212ae97c
டுரியான் பழத்தை ருசித்துப் பார்த்த பில் கேட்ஸ். - படம்: ஸியோஹோங்ஷு

உலகின் பெரும் செல்வந்தரான ‘மைக்ரோசாஃப்ட்’ பில் கேட்ஸ், சிங்கப்பூரில் உள்ளூர் உணவுகளை ருசித்து, ரசித்த காணொளிக் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

நியூட்டன் ஃபுட் சென்டரில் அமெரிக்காவின் பில்லியனரும் ‘மைக்ரோசாஃப்ட்’ இணை நிறுவனருமான பில் கேட்ஸ், சிக்கன் ரைஸ், சாத்தே, டுரியான் போன்றவற்றை ருசித்துப் பார்த்தார்.

சிறிய படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் பில் கேட்ஸ் உணவருந்திக் கொண்டிருந்தார்.

அவர்கள், நியூட்டன் ஃபுட் சென்டரில் இருப்பதை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டின. அப்போது டுரியான் பழத்தை பில் கேட்ஸ் ருசித்துப் பார்க்க முயற்சி செய்வதையும் காண முடிந்தது.

முதலில் டுரியான் பழத்தை நுகர்ந்துபார்க்கிறார். பின்னர், தயக்கத்துடன் இரண்டொரு முறை வாய் டுரியானைச் சுவைத்த பிறகு வைத்துவிடுகிறார்.

மற்றொரு காணொளியில் அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது உள்ளூர் உணவுகளான சாத்தே, சிக்கன் ரைஸ் உள்ளிட்டவை அவருக்குப் பரிமாறப்பட்டன.

ஆசிய அறக்கொடை 2025 மாநாட்டில் பங்கேற்பதற்காக பில் கேட்ஸ் சிங்கப்பூர் வந்தார்.

அந்த மாநாட்டில் தனது லாப நோக்கற்ற அமைப்பான கேட்ஸ் அறக்கட்டளையின் அலுவலகம் சிங்கப்பூரில் திறக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதே நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், அதிபர் தர்மன் சண்முகரத்னம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்